Monday, April 2, 2012

பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள

விவசாய விளை பொருட்களின் அகில இந்தியாவின் பல ஊர்களின் விலைகளை பல ஆங்கில வணிக தினசரிகள் வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பாக காபி, கோப்ரா (தேங்காய்), நெய், டிரை புரூட்ஸ், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள், பெப்பர், ஏலக்காய், இஞ்சி, மில்க் பவுடர், எண்ணெய் வகைகள், புண்ணாக்கு, ரப்பர், ஜீனி, கோதுமை போன்றவைகளின் அகில இந்திய விலைகள் வருகின்றன. நமது தினமலர் நாளிதழும் தினசரி மார்க்கெட் நிலவரங்களை தொகுத்து அழகாகத் தருகிறதே.

இது தவிர காய்கறி, மலர், பழங்கள் ஆகியவைகளின் தமிழ்நாட்டு மார்க்கெட்  விலைகளை தெரிந்து கொள்ள ஒரு அருமையான இணையதளம் சென்று பாருங்கள் http://indg.in/india/market_information.  

Monday, March 26, 2012

மேலும் இரண்டு ஏற்றுமதி புத்தகங்கள்

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் 
மற்றும் 
ஏற்றுமதி சின்ன சின்ன செய்திகள் 


என்ற இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. விஜயா பதிப்பகம் கோயம்புத்தூர் வெளியீடு ஆகும்.


அன்புடன் 
சேதுராமன் சாத்தப்பன் 



Monday, March 7, 2011

புத்தக விமர்சனம் - பணம் காய்க்கும் மரம்

நூல் அறிமுகம்
Sunday, January 16, 2011, 12:18:06 AM noreply@blogger.com (Tadrupa)

விலைவாசி உயர்வும், நாளுக்கு நாள் மாறிவரும் நாகரிகச் சூழலும் மனிதனை திணறச் செய்கின்றன. காலங்காலமாய் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நமது முன்னோர்கள்.
செல்லப் பிள்ளைகளுக்கு அம்மா சேமிக்கும் ரகசிய இடங்கள் தெரிந்திருக்கும்.
பெண்களின் சேமிப்பின் பலனை ஆண்களும் சிரமமான சூழ்நிலையில் அடைகிறார்கள்.
பெரியோர்கள் உங்கள் முதல் செலவு சேமிப்பாய் இருக்கட்டும் என்பார்கள்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிட்டதட்ட காணக்கிடைக்காத இந்நாளில், தனிக்குடித்தன வாழ்வில் கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தாலும் சேமிப்பின் அருமையை உணராததால் பல தம்பதிகள் தடுமாறுகிறார்கள். மேலைக்கலாசாரம் செலவுக்கலாசாரம். இந்தியா சேமிப்பு கலாசாரமுடையது. மேலைநாகரிகத்தின் தாக்கத்தால் உணவு வாழ்க்கை முறை மாறியது. சேமிப்பு கலாச்சாரமும்கூட.

வெளிநாட்டு வங்கியொன்றின் இந்திய உதவிப் பொது மேலாளராய் மும்பையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழரான திரு. சேதுராமன் சாத்தப்பன் எழுதியிருக்கும், பணம் காய்க்கும் மரம் என்கிற நூல் நமக்கு சேமிப்பு முறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விரிவாய் சொல்கிறது.உண்டியல் தொடங்கி பங்குச்சந்தை வரை ஒவ்வொரு தலைப்பிலும் நூலாசிரியரின் அனுபவம் பேசுகிறது.

நூலைப் படித்தால் சேமிக்காதவர்கள் உடனடியாக சேமிக்கத்தொடங்குவார்கள். சேமித்துக்கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிகம் சேமிக்கத் திட்டமிடுவார்கள். இப்படி படிக்கும் அனைவரையும் சேமிப்பிற்கு தயார் செய்வது அவருடைய எழுத்தின் வெற்றி.ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் நூலாசிரியர் தரும் குறிப்புகள் நமக்கு பொருளாதாரத்தை போதிக்கின்றன. சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை சொல்கிறார்.

செலவுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாய் சொல்கிறார். வங்கியில் இருக்கும் தொகையை சிறப்பாய் பயன்படுத்த ஆசிரியர் தரும் யோசனை இது. ''உபரியாய் இருக்கும் பணத்தை சேமிப்புக்கணக்கில் போட்டு வைக்காதீர்கள். எத்தனை நாட்கள் உங்களுக்கு அந்தப் பணம் தேவையில்லையோ, அத்தனை நாட்களுக்கு வட்டி கிடைக்கும். சில மியூச்சுவல் பண்டுகள்கூட இதுபோன்ற லிக்யூட் போன்ற பண்டுகளை ஆரம்பித்துள்ளது. இவை சேமிப்பு அதிக வருமானம் தரும்.'' சேமிக்கவும் சேமித்த பணத்தை நல்லமுறையில் முதலீடு செய்யவும் சுலபமான வழிகாட்டும் பணம் காய்க்கும் மரம் நூலை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விலை: ரூ.60 கிடைக்குமிடம் : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001 போன்: 0422-- 2382614

Wednesday, June 18, 2008